மக்களின் போராட்டம் : முடிவிலிருந்து பின்வாங்கிய கென்ய ஜனாதிபதி
கென்யாவில் பாரிய போராட்டங்களை அடுத்து சர்ச்சைக்குரிய வரி உயர்வுகள் அடங்கிய நிதி யோசனையை திரும்பப் பெறுவதாக கென்யாவின் ஜனாதிபதி வில்லியம் ருடோ (William Ruto) அறிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின்போதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்
கென்ய மக்கள் இந்த வரியுயர்வை விரும்பாமையால், தாம் அதில் கையெழுத்திடப்போவதில்லை என்று அவர் உறுதியளித்துள்ளார்.
மனித உரிமைகள் அமைப்பின் தகவல்களின்படி, கென்யாவில் கடந்த செவ்வாய்கிழமை நடந்த போராட்டங்களில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தநிலையில் போராட்டங்களில் முன்னணியில் இருந்த இளைஞர்களுடன் உரையாடலில் ஈடுபடப் போவதாக கென்ய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்த யோசனைக்கு எதிராக நாடு தழுவிய ஆர்ப்பாட்டங்கள் நடந்த போதிலும், கடந்த செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தில் அந்த யோசனை நிறைவேற்றப்பட்டது.
திருடப்பட்ட சடங்குச் சின்னம்
இதனையடுத்து எதிர்ப்பாளர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து, உட்புறத்தை நாசப்படுத்தினர்.
அத்துடன் வளாகத்தின் சில பகுதிகளுக்கு தீ வைத்தனர். சட்டமன்றத்தின் அதிகாரத்தைக் குறிக்கும் சடங்குச் சின்னம் திருடப்பட்டது.
இந்தநிலையில் வன்முறை மற்றும் அராஜகத்தை பொறுத்துக்கொள்ள முடியாது என்று கூறிய கென்ய ஜனாதிபதி இராணுவத்தை பாதுகாப்புக்கு அழைத்தார்.
எனினும் பொதுமக்களின் பாரிய போராட்டங்கள் தொடர்ந்ததை அடுத்து, அவர் தமது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

RCB-க்கு எதிராக விளையாட வருமாறு தினமும் 150 அழைப்பு வருகிறது - அவுஸ்திரேலியா வீரர் பென் கட்டிங் News Lankasri

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri

டிஆர்பியில் முன்னேறி வரும் விஜய் டிவியின் புதிய சீரியல்.. கடந்த வாரத்திற்கான டாப் 5 சீரியல் Cineulagam
