பிரித்தானிய பிரதமராக முதல் நாள் பொறுப்பேற்ற சர் கெய்ர் ஸ்டார்மர் : விவாதத்துக்குரிய திட்டம் இரத்து
பிரித்தானியாவின் பிரதமராக சர் கெய்ர் ஸ்டார்மர் முதல் நாள் பொறுப்பேற்றதன் பின்னர் , ரிஷி சுனக் நிறைவேற்றத் துடித்த, செலவு அதிகம் கொண்ட பலரது எதிர்ப்பையும் சம்பாதித்த ருவாண்டா திட்டமானது இரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த திட்டத்திற்கு செலவு செய்யும் தொகையை ஆட்கடத்தல் குழுக்களை ஒழிக்க பயன்படுத்த இருப்பதாகவும், அதனால் சட்டவிரோத புலம்பெயர் மக்கள் பிரித்தானியாவில் நுழைவதை தடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
அடைக்கலம் கோருவோர்
ரிஷி சுனக் அமைச்சரவை நிறைவேற்றத் துடித்த ருவாண்டா திட்டமானது இரத்து செய்யப்பட்டுள்ளது என்றே தொழில் கட்சி தரப்பிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ருவாண்டா திட்டம் வீண் செலவு என குறிப்பிட்டுள்ள புதிய பிரதமர், இதுவரை 500 மில்லியன் பவுண்டுகள் செலவிடப்பட்டும் 1 சதவிகித சிறு படகு பயணிகளும் கூட ருவாண்டாவுக்கு வெளியேற்றப்படவில்லை என விமர்சித்துள்ளார்.
இதனால் அப்படியான திட்டம் பிரித்தானியாவுக்கு தேவையில்லை என்றும், கண்டிப்பாக அந்த திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் எண்ணமும் தமக்கு இல்லை என ஸ்டார்மர் அப்போதே தெரிவித்திருந்தார்.
மேலும், அடைக்கலம் கோருவோர் தொடர்பிலான விண்ணப்பங்கள் விரைவாகவும் மனிதத்தன்மையுடனும் பரிசீலிக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 37 நிமிடங்கள் முன்

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam
