கெஹெலியவிற்கு எதிராக கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்கப்படாது: சாகல காரியவசம்
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக கட்சி ரீதியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாது என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சாகல காரியவசம் தெரிவித்துள்ளார்.
மேலும், நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ள நிலையில் கெஹெலியவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாது என அவர் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டிருப்பதனால் கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்க்கட்சிகள் சிவில் அமைப்புக்கள் உள்ளிட்ட பல கெஹெலியவை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குமாறு கோரி வருகின்ற நிலையில் நீதிமன்றம் குற்றவாளி என தீர்மானிக்கும் வரையில் கட்சி எவ்வித நடவடிக்கையும் எடுக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri
