முடிவுக்கு வந்த கெஹலியவின் வழக்கு!
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான பண மோசடி வழக்கை முடித்து வைக்குமாறு கொழும்பு மஜிஸ்திரேட் நீதிபதி அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று(09.09.2025) தொடரப்பட்ட வழக்கில், பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைய அதிகாரிகள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளனர்.
நீதிபதி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஆணைய அதிகாரிகள், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் வழக்கை முடித்து வைக்க முடியும் என கூறியுள்ளனர்.
பிணையில் விடுதலை
அதன்படி, வழக்கை முடித்து வைக்க முடியும் எனவும் குற்றம் சாட்டப்பட்டவர்களை பொருத்தமான திகதிகளில் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று இந்த முறைப்பாடு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோர் நீதிமன்றத்தில முன்னிலையாகியிருந்தனர்.
கெஹெலிய ரம்புக்வெல்ல, அமைச்சராக இருந்த காலத்தில் 97 மில்லியன் ரூபாய்க்கு மேல் வங்கிக் கணக்குகள், ஆயுள் காப்பீட்டுக் கொள்கைகள் மற்றும் வாகனங்களை கையகப்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தார்.
அத்துடன், அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் ஒரு மருமகன் ஆகியோரும் கைது செய்யப்பட்டு பின்னர் கெஹெலிய உட்பட அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

ரோஜா ரோஜா பாடல் மூலம் ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பிய பார்க்க வைத்த இளைஞன்.. யார் இவர் Cineulagam
