போராட்டக் காரர்களுக்கு கெஹலிய வழங்கும் அறிவுரை
மக்களால் நாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டவர்களைத் தவிர வேறு எந்த குழுவிற்கும் அதிகாரம் வழங்கும் முறைமை இல்லை என முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அவ்வாறானதொரு பொறிமுறை இருந்தால் அதனை முன்வைக்குமாறு காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டம் செய்பவர்களுக்கு ஆலோசனை வழங்குவேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லை என எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் காட்டினால் அவர்களுக்கு அதிகாரத்தை வழங்குவதில் பிரச்சினை இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 225 எம்.பி.க்கள் வெளியேறும்போது, அடுத்து யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்? நாடு மீண்டும் அராஜகமாக மாற அனுமதிக்க முடியாது. ஈராக், ஈரான், சிரியா, லிபியா மற்றும் லெபனான் போன்ற நாடுகளின் அரசாங்கங்கள் வலுக்கட்டாயமாக கவிழ்க்கப்பட்ட நாடுகளின் நிலைமையை நாம் மறந்துவிடக் கூடாது.
நாட்டை வங்குரோத்து மற்றும் வளங்களை கொள்ளையடிக்க எவரும் செயற்படுவதாக தாம் நம்பவில்லை எனவும், எவரொருவர் புரட்சியை முன்னெடுப்பார்களோ அவர்கள் தங்கள் கோரிக்கைகளை புரிந்து கொள்ள வேண்டும், அல்லது அதன் விளைவு பேரழிவை ஏற்படுத்தும்.
உலக அரசியல் வரலாற்றில் இவ்வாறானதொரு அதிகாரத்தை கையளிக்கும் முறையை நான் பார்த்ததில்லை. கோவிட் காரணமாக எங்களின் பல முக்கிய வருவாய் வழிகள் தடுக்கப்பட்டுள்ளன என்பதை நாம் அனைவரும் அறிவோம். சுற்றுலாத் துறையிலிருந்து வருடாந்தம் சுமார் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெறுகிறோம்.
வருடாந்தம் சுமார் 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டுப் பணமாக நாட்டுக்கு வருகிறது. கோவிட் காரணமாக நாடு பல சந்தர்ப்பங்களில் மூடப்பட்டது. ஆனால், தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சியை வெற்றிகரமாக எடுத்தோம். இந்த உண்மைகளை மறந்துவிடக் கூடாது.
225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீக்கப்பட்ட நிலையில், அடுத்ததாக நாட்டின் நிர்வாகத்தை யாரிடம் ஒப்படைப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த வகையில் நாட்டை எதிர்க்கட்சிகளிடம் ஒப்படைக்க முடியாது. ஏனென்றால், 225 எம்.பி.க்களையும் நீக்க வேண்டும் என இவர்கள் கூறுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

viral video: ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புக்கு அருகில் அசால்ட்டாக சாக்லேட் சாப்பிடும் குழந்தை! Manithan

கார் பிரச்சனையில் தப்பித்த முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. என்ன செய்வார்கள், சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
