மருந்து தட்டுப்பாட்டை சமாளிக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள்: அமைச்சர் விளக்கம்
குறைபாடுகள் இருந்தபோதிலும் தற்காலிக மருந்து தட்டுப்பாட்டைச் சமாளிக்க அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகச் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறியுள்ளதாவது, தற்போதைய மருந்து நிலைமை சமாளிக்கக்கூடியதாக இருக்கின்றது.
அத்துடன், இந்தப் பிரச்சினைகளை நிவர்த்தி செய்து முன்னோக்கி நகர்த்துவதற்கான வேலைத்திட்டத்தைச் சுகாதார அமைச்சு ஆரம்பித்துள்ளது.
இறக்குமதி செய்வதற்கான கொள்முதல்
மேலும், இந்த விடயம் தொடர்பில் விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்.
இலங்கையில் 19 வகையான உள்ளூர் மருந்துகளின் தற்காலிக பற்றாக்குறையைச் சமாளிக்க அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் மருந்துகளின் உற்பத்தியை 30 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை அதிகரிக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான கொள்முதல் செயல்முறையின் செயல்திறனை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அவற்றின் தரத்தை உறுதி செய்வதில் குறிப்பாகக் கவனம் செலுத்துவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |