கெஹலிய ரம்புக்வெல்லவின் இல்லத்திற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது!
கண்டியில் உள்ள அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் வீட்டிற்கு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மூன்று சந்தேக நபர்களும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற பதற்ற நிலைமையின் போது அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் இல்லத்துக்கு தீ வைக்கப்பட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் போதே இவ்வாறு மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் கண்டி முல்கலம்பொல, ஹீரஸ்ஸகல மற்றும் விஹார மாவத்தையை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குற்றப்புலனாய்வு பிரிவினர்
கைதானவர்கள் 25,29 மற்றும் 32 வயதுகளையுடையவர்களே இவ்வாறு கைதானதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், வீட்டின் மீது கற்களை வீசியமை மற்றும் தீ வைத்தமை மற்றும் சட்டவிரோதமான சபை உறுப்பினர்களாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
இந்தோனேசியாவுக்கான புதிய தூதுவராக ஜயநாத் கொலம்பகே நியமனம் |