மருந்து இறக்குமதி மோசடியில் சிக்கிய கெஹெலிய ரம்புக்வெல்ல - வழக்கு விசாரணை தொடர்பில் வெளியான தகவல்
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிரான மருந்து இறக்குமதி மோசடி தொடர்பான வழக்கின் விசாரணைகள் இன்று(19) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. த
ரமற்ற இம்யூனோகுளோபுலின் மருந்தினை மோசடியாக இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக நிரந்தர மூன்று நீதிபதிகள் கொண்ட விசேட மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு
குறித்த வழக்கின் முறைப்பாட்டுத் தரப்பு சாட்சியாளர்களின் வாக்குமூலங்கள் தொடர்பில் இன்றைய தினம்(19.05.2026) விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த வழக்கில் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூவர் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.
சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சார்பில் சிரேஷ்ட சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம சாட்சியங்களை நெறிப்படுத்துகின்றார்.
குறித்த வழக்கின் சாட்சியாளர்களுக்கு நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு நீதிமன்ற அழைப்பாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் தமிழ் குடும்பத்தின் வீட்டில் சிங்கள அமைச்சரின் மகள் -அம்பலப்படுத்தும் சிங்கள அரசியல்வாதி
ஈஸ்வரி குறித்து பார்கவி சொன்ன விஷயம், ஆடிப்போன குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam