பிரித்தானியாவில் தமிழ் குடும்பத்தின் வீட்டில் சிங்கள அமைச்சரின் மகள் -அம்பலப்படுத்தும் சிங்கள அரசியல்வாதி
சமகால அரசாங்கத்தின் அமைச்சரின் மகள் ஒருவர் பிரித்தானியாவில் உயர் கல்வி கற்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் தமிழ் புலம்பெயர் அமைப்பைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான வீட்டில், குறித்த மாணவி தங்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
போர் வெற்றி நிகழ்வு
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
புலம்பெயர் அமைப்பினருடன் அமைச்சர்கள் பழகுவதை நாங்கள் தவறு என்று கூறவில்லை.
ஆனால், அரசாங்கத்தில் இருப்பவர்கள் மற்றவர்களுடன் பழகும்போது, தாங்கள் இவர்களுடனும் தொடர்பில் இருக்கிறோம் என்பதை வெளிப்படையாகக் கூற வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தத் தகவல் மூலமாக போர் வெற்றி நிகழ்வுகளுக்கு எந்த இடையூறும் விளைவிக்க விரும்பவில்லை. எனினும் இதனை வெளிப்படுத்த வேண்டியது என சாமர சம்பத் மேலும் தெரிவித்துள்ளார்.
நைட்டி விவகாரத்தில் என்னை டி.ஆர்.பிக்காக பயன்படுத்திவிட்டார்கள் : பிரிய வர்ஷினி பரபரப்பு பேச்சு! Manithan
பிரித்தானியாவில் திருமணம்... குடும்பம் ஒன்று விமான நிலையம் செல்லும் வழியில் கோர சம்பவம் News Lankasri
4 நாட்களில் உலகளவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam