சிஐடியில் இருந்து வெளியேறிய கெஹெலிய
புதிய இணைப்பு
வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
முதலாம் இனைப்பு
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல (Keheliya Rambukwella )இன்று (09) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
தரமற்ற இம்யூனோகுளோபுலின் இறக்குமதி குற்றச்சாட்டு தொடர்பான அறிக்கையை வழங்குவதற்காகவே சிஐடியில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல சந்தேகநபர்கள் பிணையில்
கடந்த வருடம் பெப்ரவரி மாதம் தரமற்ற இம்யூனோகுளோபுலின் குப்பிகளை இறக்குமதி செய்வதில் ஆதரவாக இருந்தார் எனும் குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரைக் கைது செய்திருந்தனர்.
பின்னர் கெஹலிய மற்றும் பல சந்தேகநபர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |