கெஹலியவிடம் விசாரணை முன்னெடுக்கப்படவேண்டும்: அநுர தரப்பு வலியுறுத்து
சுகாதார அமைச்சரின் தலையீடு இல்லாமல், இம்யூனோகுளோபுலின் ஊசி இறக்குமதி தொடர்பில் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உடன்படிக்கையை செய்திருக்க முடியாது என தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜெயதிஸ்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவிடம் இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இம்யூனோகுளோபுலின் ஊசி இறக்குமதி
இந்த இறக்குமதி தொடர்பில் எழுத்துமூலமான அறிவுறுத்தல்களை வழங்காவிடின் வாய்மொழியாகவாவது அவர் அனுமதி வழங்கியிருக்க வேண்டும் என நலிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் ரம்புக்வெல்லவின் அறிவுறுத்தலின் பேரிலேயே இந்த இறக்குமதிகள் இடம்பெற்றதாக கைது செய்யப்பட்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் பலர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இம்யூனோகுளோபுலின் ஊசி இறக்குமதி தொடர்பில் முறைப்பாடு செய்த முதலாவது நபர் தாம் என்பதால், தம்மிடம் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை என்று கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பத்மஸ்ரீ விருதை திருப்பி கொடுத்த இந்திய வீரர்: மோடியை குறிப்பிட்டு செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய டுவீட்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |