கெஹெலிய தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயம்பதி ஹீன்கெந்த ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த வழக்கானது இன்று (18.02.2025) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணைகள் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க முன்னிலையில் நடைபெற்றுள்ளது.
ஆதார பதிவு
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு வழிகாட்டுதலின் கீழ் முறைப்பாட்டில் மேலும் ஆதாரங்கள் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் பின்னர் நீதிமன்றம் மேலதிக சாட்சியங்களுக்காக ஜூன் 13 ஆம் திகதி வரை வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டது.
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயம்பதி ஹீன்கெந்த ஆகியோர் மீது, அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் நிதியில் இருந்து தனது சொந்த கையடக்கத் தொலைபேசி கட்டணமாக 240,000ரூபாவை ஐ செலுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தியதாகக் கூறி, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு வழக்குத் தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
