கெஹெலிய மீண்டும் விளக்கமறியலில்..!
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல(Keheliya Rambukwella) ஜூன் 3 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஊழல் தொடர்பான மூன்று குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ரம்புக்வெல்லவை இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) கைது செய்ததைத் தொடர்ந்து, கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
மகன் ரமித் ரம்புக்வெல்லவை சந்தேக நபராக
இந்த வழக்கில் ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவை சந்தேக நபராகப் பெயரிடவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இலஞ்ச ஒழிப்பு ஆணையம் மற்றும் பிரதிவாதி வழக்கறிஞர் ஆகிய இருவரின் சமர்ப்பிப்புகளையும் பரிசீலித்த பின்னர் நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
தாக்கல் செய்யப்பட்ட மூன்று வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட கெஹெலிய ரம்புக்வெல்ல, இன்று (20) அதிகாலை சிறை அதிகாரிகளால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri
