கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட பாதாள உலகப் புள்ளிகளுக்கு பொலிஸ் திணைக்களத்தில் இருந்து தகவல் பரிமாற்றம்
கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட பல்வேறு பாதாள உலகப் புள்ளிகளுக்கு பொலிஸ் திணைக்களத்திற்குள்ளே இருந்தே தகவல் வழங்குனர்கள் இருந்துள்ளமை விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த மாதம் இந்தோனேசியாவில் வைத்துக் கைது செய்யப்பட்ட கெஹல்பத்தர பத்மே , கமாண்டோ சலிந்த உள்ளிட்டவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை குறித்தும் அவர்கள் முன்கூட்டியே தகவல் அறிந்துள்ளார்கள்.
பிடியாணையின் நகல்
அத்துடன் குறித்த நபர்களை கைது செய்வதற்காக சர்வதேச பொலிசாரின் உதவியுடன் பிறப்பிக்கப்பட்டிருந்த சிவப்பு பிடியாணையின் நகல் ஒன்றும் கெஹல்பத்தர பத்மேயின் கைபேசியில் இருந்து பொலிசாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கெஹல்பத்தர பத்மே உள்ளிட்டவர்களுக்கு பொலிஸ் திணைக்களத்திற்குள்ளிருந்தே தகவல் வழங்குனர்கள் இருந்துள்ளமை தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சக்திக்கு வந்த அடுத்த பிரச்சனை, ஜனனிக்கு சவால்விடும் அன்புக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam
குணசேகரன் சதித்திட்டம், சக்தியிடம் ஜனனி சொன்ன வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது நாளைய ப்ரோமோ Cineulagam
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri