இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 26 பேர் வைத்தியசாலையில் அனுமதி
கேகாலை (Kegalle) - அவிசாவளை(Avissawella) வீதியின் கொட்டபொல பிரதேசத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
குறித்த விபத்தில், 26 பேர் வரை காயமடைந்துள்ளதாக பிந்தெனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தானது இன்று (18) மாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
கண்டியில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த தனியார் பேருந்து அதிவேகமாக பயணித்து மற்றுமொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட போது இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri