கீரிமலை ஆலயத்தில் ஜனாதிபதி மாளிகை கட்டப்பட்டுள்ளதா..! ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பதில்

Jaffna Sri Lanka Hinduism
By Jenitha Mar 11, 2023 07:51 AM GMT
Report

யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் ஜனாதிபதி மாளிகைக்கான நிர்மாணப் பணிகள் 2013ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட போதும் இந்த பணிகள் 2015இல் ஆட்சி மாற்றத்துடன் இடைநிறுத்தப்பட்டதாக வட மாகாண நகர அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளர் திசாநாயக்கவை மேற்கோள்காட்டி, ஜனாதிபதி ஊடகப் பிரிவு பிபிசிக்கு தெரிவித்துள்ளது.

29 ஏக்கர் முழு நிலப்பகுதியில் ஒரு பகுதியிலே மாளிகை அமைந்துள்ளதோடு, மாளிகை நிர்மாணிக்கப்பட்ட பின்னர் கடற்படை அங்கு பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

மாளிகை மற்றும் ஆலயம்

கீரிமலை ஆலயத்தில் ஜனாதிபதி மாளிகை கட்டப்பட்டுள்ளதா..! ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பதில் | Keerimalai Temple President S House Sri Lanka

இந்த மாளிகை மற்றும் ஆலயம் உள்ள பிரதேசம் 2022இல் அதிகாரப்பூர்வமாக நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு கையளிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கீரிமலை ஆலயம் அழிக்கப்பட்டு மாளிகை கட்டப்படவில்லை என்றும் திசாநாயக்க கூறியதாக தற்போதைய ஜனாதிபதியின் ஊடகப் பிரிவினர் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை, சிவன் ஆலயமொன்று அங்கிருந்ததாகவும், அண்மையில் கிருஷ்ணன் ஆலய நிர்வாகிகள் அந்த ஆலயம் இருந்த பகுதிக்கு கடற்படையினருடன் சென்றதாகவும் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் சிவசிறியை மேற்கோள்காட்டி, ஜனாதிபதி ஊடகப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

சிவன் ஆலயம் இருந்த இடத்தில் அன்றி அதற்கு அருகிலே ஜனாதிபதி மாளிகை நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும், 1990 வரை சிவன் ஆலயத்தில் பூஜைகள் இடம்பெற்றதாகவும் எக்காலப்பகுதியில் ஆலயம் உடைந்தது என்ற தகவல் தெரியாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், தனியாருக்கு சொந்தமான காணி சுவீகரிக்கப்பட்டு அந்த இடத்திலே ஜனாதிபதி மாளிகை கட்டப்பட்டுள்ளதாகவும், ஆலய காணி அதற்கு பயன்படுத்தப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கிருஷ்ணன் ஆலயத்தின் சில பகுதிகள் சேதம்

கீரிமலை ஆலயத்தில் ஜனாதிபதி மாளிகை கட்டப்பட்டுள்ளதா..! ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பதில் | Keerimalai Temple President S House Sri Lanka

ஆனால் ஆலயத்தின் பல பகுதிகள் சேதமடைந்து, ஆலயம் இருந்ததற்கான அடையாளங்கள் அங்கிருப்பதாக கிருஷ்ணன் ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். கிருஷ்ணன் ஆலயத்தின் சில பகுதிகள் சேதமாகியுள்ளதாகவும், மாளிகை உட்பட சுற்றியுள்ள முழுமையான காணி நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழே கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தரப்பினர் கூறுகின்றனர்.

வடபகுதிக்குப் பொறுப்பான கடற்படை கட்டளைத்தளபதி அட்மிரல் அருண தென்னகோன் இது தொடர்பில் தெளிவுபடுத்துகையில், மாளிகையின் சொத்துக்களின் பாதுகாப்பிற்காக கடற்படை அங்கு இருப்பதாகவும், நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழே இந்த பிரதேசம் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

கடற்படை பிரதான தளமும் இதற்கு அருகிலே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறுகின்றது. யாழ்ப்பாணம் இராணுவக்கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சொர்ண போதொட்ட குறிப்பிடுகையில், குறித்த பிரதேசத்தில் ஜனாதிபதி மாளிகைக்கான தேவையொன்று இல்லை என்பதை தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் மேற்கொண்ட யாழ்ப்பாண விஜயத்தின்போது குறிப்பிட்டிருந்தார்.

இந்த மாளிகை சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் சிறந்த தரத்திலான ஹோட்டல் ஒன்றாக மாற்றியமைக்க வேண்டும் என்றும் அவர் யோசனை முன்வைத்திருந்தார். யாழ்ப்பாணம் முழுமையாக ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்த பின்னர் இந்த பிரதேசம் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. இராணுவம் அங்கு எந்தவித நிர்மாணங்களை மேற்கொள்ளவோ அழிக்கவோ இல்லை என்றும் குறிப்பிட்டார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

முதலாம் இணைப்பு

யாழ்ப்பாணம் - கீரிமலை சிவன் ஆலயம் முழுமையாக இடித்து, அழிக்கப்பட்டு, அந்த இடத்தில் ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டுள்ளதாக தகவலொன்று வெளியாகியது. 

இவ்வாறு சில ஊடகங்களில் வெளியிடப்பட்ட செய்தியை வடமாகாண ஆளுநர், வடபகுதிக்குப் பொறுப்பான நகர அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளர், தெல்லிப்பழை பிரதேச செயலாளர் மற்றும் படைத்தரப்பு என்பன மறுத்துள்ளன.

உண்மைக்கு புறம்பான செய்தி

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை மேற்கொண்டதாக தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் இந்த செய்தி ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

கீரிமலை ஆலயத்தில் ஜனாதிபதி மாளிகை கட்டப்பட்டுள்ளதா..! ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பதில் | Keerimalai Temple President S House Sri Lanka

கோவில் உடைக்கப்பட்டு ஜனாதிப திமாளிகை கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் செய்தியின் உண்மைத் தன்மை தொடர்பில் சம்பந்தப்பட அதிகாரிகள் மற்றும் படையினரிடம் வினவியதில் குறித்த செய்தி உண்மைக்கு புறம்பானது என தெரிவிக்கப்படுகின்றது. 

கோவில் இருந்த இடத்தில் ஜனாதிபதி மாளிகை கட்டப்படவில்லை எனவும் அதற்கு அருகில் தனியாரிடம் சுவீகரிக்கப்பட்டு அரசுடமையாக்கப்பட்ட காணியிலே மாளிகை நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் 8 வருடங்களுக்கு முன்னரே மாளிகை நிர்மாணப்பணிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இந்த குற்றச்சாட்டை மறுத்த வடமாகாண ஆளுநர ஜீவன் தியாகராஜா,

கோவில் உடைக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை என்றும் திரிபுபடுத்தப்பட்டு தவறான கருத்தை ஏற்படுத்தும் வகையில் இவ்வாறு செய்தி பரப்பப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். 

2013 ஆம் ஆண்டிலே இங்கு ஜனாதிபதி மாளிகை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு ஆட்சி மாற்றத்துடன் 2015 இல் இந்தப்பணிகள் இடைநிறுத்தப்பட்டதாக வடக்கு மாகாண நகர அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளர் திசானாயக்க குறிப்பிட்டுள்ளார். 

கடற் படையின் கீழே இந்த மாளிகை மற்றும் கோவில் உள்ள பிரதேசம் இருந்ததோடு 2022 இல் உத்தியோகபூர்வமாக இந்தப் பிரதேசம் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு கையளிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

கீரிமலை ஆலயத்தில் ஜனாதிபதி மாளிகை கட்டப்பட்டுள்ளதா..! ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பதில் | Keerimalai Temple President S House Sri Lanka

ஜனாதிபதி மாளிகை

29 ஏக்கர் முழு நிலப்பகுதியில் ஒரு பகுதியிலே மாளிகை அமைந்துள்ளதோடு மாளிகை நிர்மாணிக்கப்பட்ட பின்னர் கடற்படை அங்கு பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். 

பத்திரிகை செய்தி தவறானது என்றும் இது தவறான புரிதலை ஏற்படுத்துவதாகவும் கோவில் அழிக்கப்பட்டு மாளிகை கட்டப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். 


 

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US