காசா மற்றும் மேற்கு கரையில் செயற்பட்ட 37 உதவி அமைப்புக்கு தடைவிதித்த இஸ்ரேல்
2025 டிசம்பர் (இன்று) 31 முதல் காசா மற்றும் மேற்கு கரையில் செயற்பட்டு வந்த 37 மனிதாபிமான உதவி அமைப்புகளின் உரிமங்களை இஸ்ரேல் இரத்து செய்ய முடிவு செய்துள்ளது.
புதிய பதிவு விதிகளை பின்பற்றவில்லை மற்றும் குறிப்பாக ஊழியர்களின் முழுமையான தனிப்பட்ட விபரங்களை வழங்கவில்லை என்பதே, இந்த தடைக்கான காரணமாக கூறப்பட்டுள்ளது.
பிரபல சர்வதேச தொண்டு அமைப்புகள்
ActionAid, International Rescue Committee, Norwegian Refugee Council, CARE போன்ற பிரபல சர்வதேச தொண்டு அமைப்புகளும் இதில் அடங்குகின்றன.

இந்த உத்தரவின்படி, 2026, ஜனவரி 1 முதல் உரிமம் இடைநிறுத்தப்பட்டு, 60 நாட்களுக்குள் செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும். எனினும் இந்த முடிவை இங்கிலாந்து உள்ளிட்ட 10 நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இதனால் காசாவில் சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்படும் என்றும், மனிதாபிமான நிலைமை ஏற்கனவே மிக மோசமாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மனிதாபிமான உதவி ஓட்டம்
ஆனால் இஸ்ரேல் அரசு, இந்த நடவடிக்கையால் மனிதாபிமான உதவி ஓட்டம் பாதிக்காது என்றும், ஐ.நா. அமைப்புகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட வழிகளின் மூலம் உதவி தொடரும் என்றும் கூறியுள்ளது.
அத்துடன், இது பாதுகாப்பு காரணங்களுக்காக எடுக்கப்பட்ட முடிவு எனவும், இஸ்ரேல் அரசு விளக்கம் அளித்துள்ளது.