கட்டுநாயக்க விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்(Bandaranaike International Airport) கடமையில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படையின் விமானப்படை வீரர் ஒருவரின் துப்பாக்கியொன்று செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் இன்று (30) காலை 10.25 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
சம்பவத்தில் விமானப்படை வீரரின் கையிலிருந்த T-56 ரக துப்பாக்கியே தவறுதலாக செயற்பட்டுள்ளதாகவும் இதனால் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுகின்றது.
மேலதிக விசாரணை
இந்நிலையில், துப்பாக்கி செயற்பட்டதனால் விமான நிலைய முனையமொன்றின் உட்கூரையில் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தின், விசேட விருந்தினர் பகுதியான “VIP Lounge Gold Route” முனைய பகுதியிலேயே சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உலகின் முன்னணி வர்த்தகர்கள் மற்றும் பணம் செலுத்தி வசதிகளைப் பெறும் நபர்கள் இந்த முனையத்தின் ஊடாக பயணங்களை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில், குறித்த விமானப்படை வீரர், இலங்கை விமானப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் மற்றும் இலங்கை விமானப்படையினர் மேற்கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |