மீண்டும் திறக்கப்படும் கட்டுநாயக்க விமான நிலையம்! வெளிநாடுகளிலிருந்து வருவோருக்கான அறிவித்தல்
நாட்டிலுள்ள சர்வதேச விமான நிலையங்கள் எதிர்வரும் 21ஆம் திறக்கப்பட உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளுக்கான சுகாதார நடைமுறைகளை சுற்றுலாத்துறை அமைச்சு வெளியிட்டுள்ளது.
இதன்படி, அனைத்து நாடுகளினதும் சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தர முடியும். எனினும், உள்வருகைக்காக முன் அனுமதி உள்ளிட்ட ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடுமையான தனிமைப்படுத்தல் விதிமுறைகள் பயன்படுத்தப்பட மாட்டாது எனவும், அவர்களுக்கு வழங்கப்பட்ட ஹோட்டல்களில் தங்கியிருப்பது அவசியம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, முதலாம் கட்ட பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட 55 ஹோட்டல்கள் 11 மாவட்டங்களில், சுற்றுலாத்துறை அமைச்சினால் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த ஹோட்டல்களில் உள்நாட்டு மக்களுக்கு தங்க அனுமதி வழங்கப்பட மாட்டாது என சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், சுற்றுலா பயணிகள் வருகை தர 96 மணி நேரத்துக்கு முன்னதாகவும், வருகை தந்த பின்னரும் கட்டாய PCR பரிசோதனையை மேற்கொள்வது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தடுப்பூசி பெற்ற சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படவில்லை எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.