கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் - வாடகை வாகனங்களுக்கு எதிர்ப்பு
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வாடகை சேவையில் வாகனங்களை விடும் நிறுவனங்களை இணைக்க எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பயணிகளி்ன் வசதி கருதி விமான நிலையத்தில் Pick-me மற்றும் Uber சேவைகளை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த சேவைகளுக்கு எதிராக கட்டுநாயக்க விமான நிலைய டாக்சி சங்கங்களின் சாரதிகள் இன்று தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் உள்ளே மூன்று டாக்ஸி சங்கங்களின் கீழ் சுமார் 1,400 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த சங்கங்கள் 1980 ஆம் ஆண்டு முதல் கட்டுநாயக்க விமான நிலைய பயணிகளுக்கு சேவைகளை வழங்கி வருகின்றன.
எனினும் சமகாலத்தில் பல தனியார் சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு போக்குவரத்து சேவைகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் முதல் நாளில் மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள விஜய்யின் ஜனநாயகன்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
விருச்சிகத்தில் சந்திரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்! Manithan