உயரதிகாரிகள் உட்பட குறிப்பிட்ட சிலருக்காக விமான நிலைய பாதுகாப்பு தளர்த்தப்பட்டதா...! வெளியான அறிவிப்பு
விமான நிலைய பாதுகாப்பு கமரா அமைப்புக்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் வெளியாகும் இவ்வாறான தவறான குற்றச்சாட்டுக்களை கடுமையாக மறுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும்,
விமான நிலையத்தில் பாதுகாப்பு கமரா அமைப்புகளை மாற்றவில்லை. தனிப்பட்ட தேவைகளின் அடிப்படையில் எந்த பாதுகாப்பு நடைமுறைகளும் தளர்த்தப்படவில்லை.
கடந்த 48 மணி நேரத்தில், குறிப்பிட்ட சில பயணிகள் மற்றும் உயரதிகாரிகளின் புறப்பாடு நடைமுறைகள் குறித்து பொது மக்களை தவறாக வழிநடத்தும் பல்வேறு தவறான செய்திகள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
இவ்வாறான தவறான விளக்கங்கள் அல்லது குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுக்கிறோம்.
அத்துடன் இலங்கையின் கண்ணியம் மற்றும் அதன் பயணிகளின் பாதுகாப்பிற்காக தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயலாற்றப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam
விஜய்யை நெஞ்சில் டாட்டூவாக குத்தியும் இப்படியா.. வேறு கட்சியில் இணைந்த தாடி பாலாஜி, விமர்சிக்கும் நெட்டிசன்கள் Cineulagam
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri