கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளின் வருகையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இந்த ஆண்டின் முதல் 8 மாதங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகள் போக்குவரத்தில் 14 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டின் முதல் 8 மாதங்களில் 58,37,351 பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்கு வரகை தந்துள்ளனர்.
இந்த ஆண்டின் முதல் 8 மாதங்களில் அதே எண்ணிக்கை 66,30,728 ஆக பதிவாகியுள்ளது. 2024 ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களுடன் ஒப்பிடும்போது இது 13.59 சதவீதம் அதிகமாகும்.
பயண நடவடிக்கை
2025 ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் ஒகஸ்ட் மாதத்தில் அதிகபட்சமாக 922,993 பயணிகள் பயண நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
எதிர்வரும் சுற்றுலா காலம் ஆரம்பித்துள்ள நிழைலயில் புதிய விமானங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.
மேலும் சுற்றுலாப் பருவத்திலும் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்று விமான நிலையம் மற்றும் விமான நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.




