கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்படவுள்ள மாற்றம்
கட்டுநாயக்க விமான நிலைய விமான நிறுவனத்திற்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கும் இடையிலான பிரச்சினைகள் மற்றும் விமானத் துறையின் முன்னேற்றம் குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளது.
துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில், இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரண்டு தடவைகள் பயணிகளை பரிசோதிப்பதில் ஏற்படும் அசௌகரியங்களை தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உட்கட்டமைப்பு வசதி
அதற்கமைய, நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் ஒரே இடத்தில் முறைப்படி பரிசோதனை செய்வதற்கு தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் தற்போது தயார் செய்யப்பட்டு வருவதாகவும், அதனை செப்டெம்பர் மாதம் முதல் ஆரம்பிக்குமாறும் அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், விமான நிலையம் மற்றும் விமான சேவை ஆகியன இணைந்து செயற்பட வேண்டும் எனவும், இந்த இரண்டு நிறுவனங்களின் கூட்டுச் செயற்பாடுகளிலேயே இலங்கை விமானத் துறையின் முன்னேற்றம் தங்கியுள்ளது என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
You may like this