கட்டுநாயக்க விமான நிலையத்தில் மனித கடத்தல் வழக்குகள் அதிகரிப்பு
கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக கடந்த சில வாரங்களில் மனித கடத்தல் வழக்குகள் அதிகரித்து வருவதால், இலங்கை எல்லைக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் இன்று வரை இவ்வாறான 102 முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன.
நேற்று மற்றும் சனிக்கிழமை பதிவான இரண்டு சம்பவங்களில், மூன்று வெளிநாட்டவர்கள் முறையே பயணிகளாக இலங்கை வந்துள்ளனர்.
போலியான பயண ஆவணங்கள்
கத்தாரில் இருந்து வந்த சாட் நாட்டவர் போலியான கனேடிய பயண ஆவணங்களுடன் வந்துள்ளார். இதேவேளை இந்திய தம்பதியினர் போலியான சீன கடவுச்சீட்டுடன் நெதர்லாந்திற்கும் செல்ல முயற்சித்துள்ளனர்.
இதேவேளை இலங்கையின் குடிவரவு அதிகாரிகள் 2022 இல் 137 சம்பவங்களையும், 2021 இல் 46 சம்பவங்களையும் 2020 இல் 34 சம்பவங்களையும், 2019 இல் 20 சம்பவங்களையும் முறியடித்துள்ளனர்.
அவர்களில் பெரும்பாலும் இத்தாலி, கனடா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கே செல்ல முயற்சித்துள்ளனர்.
இதில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் போலி கடவுச்சீட்டுகளுடன் இத்தாலிக்கு செல்ல முயன்ற வடபகுதியைச் சேர்ந்த ஏழு இலங்கைப் பிரஜைகள் கைது செய்யப்பட்ட சம்பவமும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri

ஷார்ஜாவில் தூக்கில் தொங்கி இறந்த கேரள பெண்: இந்தியா திரும்பிய கணவர் விமான நிலையத்தில் கைது News Lankasri

விக்ரம் ரோலக்ஸ் போல் கூலி படத்தில் சர்ப்ரைஸ் ஹீரோ கேமியோ.. மிரட்ட வரும் முன்னணி நடிகர்? யார் தெரியுமா Cineulagam
