இலங்கையில் இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்
இலங்கையில் இலத்திரனியல் கடவுச்சீட்டை நீண்டகாலமாக இழுபறி நிலை காணப்படுவது குறித்து கோபா குழு கவனம் செலுத்தியுள்ளது.
அண்மையில் கோபா எனப்படும் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு ஒன்றுகூடிய போது இது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
விமான நிலைய ஈ-கேட் (E-gate) வசதி தொடர்பான உபகரணங்களை கொள்வனவு செய்வதற்குக் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதிநிதி ஒருவரை தொடர்பு கொள்ள வேண்டுமென சிவில் விமான சேவைகள் அதிகாரசபையினால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஈ-கேட் வசதி
எனினும் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்காததால் மொத்த ஈ-கேட் வசதி வழங்குவதிலும் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து குழு தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது.
எதிர்வரும் ஏப்ரல் 15ஆம் திகதிக்கு முன்னர் இதன் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
தொழில்நுட்பக் கருவி
விமான நிலைய நெரிசலை குறைப்பதற்கு சுய பரிசோதனை உள்ளிட்ட நவீன தொழில்நுட்பக் கருவிகளைக் கொண்டு முன்னேற்ற வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு வலியுறுத்தப்பட்டது.
இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்குவதில் 4 ஆண்டுகளாகத் தாமதம் ஏற்பட்டுள்ளமை குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam
