ஐரோப்பிய நாடொன்றிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சடலத்தில் துப்பாக்கி சூட்டு காயங்கள்
வெளிநாடு ஒன்றிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட சடலம் ஒன்றில் துப்பாக்கி சூட்டு காயங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துருக்கி விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட சடலத்திலேயே துப்பாக்கி சூட்டு காயங்கள் காணப்படுவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை 4 மணியளவில் அந்த சடலம் கொண்டு வரப்பட்டுள்ளது. குறித்த சடலம் கம்பஹா, நெதுன்கமுவ பிரதேச்தை சேர்ந்த 32 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் இத்தாலி, எப்ரேனியா நகரத்தில் பணியாற்றிய ஒருவர் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அவர் பணியாற்றிய இடத்தில் இந்த நபர் உயிரிழந்துள்ளதாகவும் அதன் பின்னர் அவரது சடலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸாரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் நீதிமன்றத்தில் தகவல் வெளியிட்டு பிரதேச பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan