கட்டுநாயக்க விமான நிலையத்தில் காணாமல்போயுள்ள பொதிகள்: ஒருவர் கைது
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊழியர் ஒருவர் விமான நிலைய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலையத்திற்கு அனுப்பப்படும் பயணிகளின் பயணப்பொதிகளை திறந்து பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொதிகளைக கையாளும் பிரிவில் பணிபுரியும் சந்தேக நபர், செப்டம்பர் 23 ஆம் திகதி மலேசியாவில் இருந்து வந்த விமானத்தில் பயணிகளின் பொதிகள் சேமிப்பு பகுதிக்குள் இரகசியமாக நுழைந்ததாக கூறப்படுகிறது.
சந்தேகநபர் பயணிகளின் பொதிகளை திறந்து உள்ளே இருந்த பொருட்களை திருடுவது சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.
கட்டுநாயக்க பொலிஸார் விசாரணை
கமரா காட்சிகளை அவதானித்த விமான நிலைய புலனாய்வு அதிகாரிகள் சந்தேகநபர் குறித்து கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளின் பயணப் பொதிகளில் இருந்து பொருட்கள் காணாமல்போயுள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்த நிலையில், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |