டுபாயிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் வந்திறங்கியவர் கைது
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகள் மற்றும் இரசாயனங்களை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த விமான பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (14) அதிகாலை சுங்க அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து இரண்டு மில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட்டுகள் மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் இரசாயனங்க கைப்பற்றப்பட்டுள்ளன.
தடுத்து வைத்து மேலதிக விசாரணை
கொழும்பு-10 பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகரான இவர், டுபாயில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-226 இல் இன்று காலை 05.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்போது கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan
