வரலாற்று சிறப்பு மிக்க காட்டுவிநாயகர் ஆலயம் மகாகும்பாபிஷேகம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க முள்ளியவளை பகுதியில் அமைந்துள்ள முள்ளியவளை காட்டுவிநாயகர் ஆலயத்தின் கும்பாபிஷேகத்தின் இரண்டாம் நாள் நிகழ்வானது சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
வெள்ளைக்கை நாச்சியாரால் வழிபட்டதும் பரராசசேகர மன்னரால் பல திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதுமான முள்ளியவளை காட்டுவிநாயகப்பெருமானுக்கு ஒன்பது தளங்கள் கொண்ட இராஜகோபுரம் புதிதாக அமைக்கப்பட்டு புனருத்தாபன பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் ஆரம்பமாகியுள்ளது.
கும்பாபிஷேக நிகழ்வு
குறித்த கும்பாபிஷேக நிகழ்வு கடந்த வியாழக்கிழமை (14.03.2024)பிள்ளையார் வழிபாட்டுடன் கர்மாரம்பம் ஆரம்பமாகிய நிலையில் எதிர்வரும் 17,18,19ஆம் திகதி வரையான மூன்று நாட்கள் எண்ணைய்காப்பு சாத்தும் வைபவம் இடம்பெற்று எதிர்வரும் புதன்கிழமை (20) காலை 9.30 மணிதொடக்கம் 11.30 மணிவரை மகாகும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உப்பு நீரில் விளக்கெரியும் அற்புத புதுமையினை நிகழ்த்தும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் பொங்கல் நிகழ்விற்காக எடுக்கப்படும் கடல் தீர்த்தம் முள்ளியவளை காட்டுவிநாயகர் ஆலயத்தில் ஒருவாராங்கள் அம்மன் சன்னிதானத்தில் வைத்து வழிபாடுகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.