காத்தான்குடி பொலிஸ் பிரிவில் 7 பேர் கைது
தற்போது அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தைப் பயன்படுத்தி 7000 மில்லி லீற்றர் கசிப்பு ,630 மில்லி கிராம் ஹெரோயின், ஒரு தொகை ஐஸ் மற்றும் கஞ்சா என்பவற்றைக் கடத்திய 7 பேரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி தெரிவித்துள்ளார்.
நேற்று(18) இரவு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்கவின் உத்தரவின் பேரில் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.ஆர் குமாரசிரியின் வழிகாட்டலில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி, மாவிலங்கத்துறை, காத்தான்குடி ஆகிய இடங்களிலேயே இவர்கள் கைதாகியுள்ளனர்.
கைதான நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam