காத்தான்குடி தொடர்ந்து தனிமைப்படுத்தலில் - வர்த்தக நிலையங்கள் தொடர்ந்து மூடல்
மட்டக்களப்பு காத்தான்குடியில் 8 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தொடர்ந்து 10வது நாளாகவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
காத்தான்குடியில் கோவிட் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவிலுள்ள 8 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் கடந்த 23ம் திகதி முடக்கப்பட்டன.
காத்தான்குடி 4ம் குறிச்சி 164, காத்தான்குடி 5ம் குறிச்சி 164ஏ, காத்தான்குடி 5ம் குறிச்சி தெற்கு 164பி, காத்தான்குடி6 தெற்கு 162ஏ, காத்தான்குடி6 மேற்கு 162பி, புதிய காத்தான்குடி மேற்கு 167ஏ, புதிய காத்தான்குடி தெற்கு 167சி, புதிய காத்தான்குடி கிழக்கு 167பி ஆகிய எட்டு கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன.
முடக்கப்பட்ட பகுதிகளில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.
முடக்கப்பட்ட பகுதிகளில் காத்தான்குடி சுகாதார அதிகாரிகள் அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதுடன், பொலிஸாரும் இராணுவத்தினரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.











ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam
