கீமோதெரபி சிகிச்சைக்கு பின்னர் பொதுவெளியில் தோன்றிய கேட் மிடில்டன்
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் கீமோதெரபி சிகிச்சைக்கு பின்னர் பொதுவெளியில் தோன்றியுள்ளார்.
பிரித்தானியாவில் அண்மையில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் கொல்லப்பட்ட மூன்று சிறுமிகளின் குடும்பத்தினரை கேட் மிடில்டன் சந்திக்க சென்றுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு பின்னர் கேட் மிடில்டன் சமூக சந்திப்புகளில் எதுவும் கலந்துகொள்ளவில்லை.
புற்றுநோய்க்கான சிகிச்சை
ஆனால் தற்போது புற்றுநோய்க்கான கீமோதெரபி சிகிச்சை முடிவுக்கு வந்ததை அடுத்து அவர் முதன்முதலில் சவுத்போர்ட் பகுதிக்கு விஜயம் செய்துள்ளார்.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மூன்று குடும்பங்களையும் வில்லியம் - கேட் தம்பதி தனிப்பட்ட முறையில் சந்தித்துள்ளனர். ஜூலை மாதம் கோடைகால விடுமுறை முகாம் ஒன்றில், முன்னெடுக்கப்பட்ட தாக்குதலில் மூன்று சிறுமிகள் கொல்லப்பட்டதுடன், 8 சிறுவர்கள் உட்பட 10 பேர் படுகாயமடைந்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தங்கள் ஆதரவை உறுதி செய்ய வேண்டும் என வில்லியம் - கேட் தம்பதி விரும்பியதாகவும், அதனாலையே, கேட் மிடில்டன் சிகிச்சை முடித்துக்கொண்டதும், முதல் வேலையாக அந்த சிறுமிகளின் குடும்பத்தினரை சந்திக்க முடிவு செய்துள்ளதாவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |