கஸ்தூரிரங்கனுக்கு மாரடைப்பு: பெங்களூருவுக்கு விமானம் மூலம் அழைத்து செல்ல நடவடிக்கை
இந்தியாவின் விண்வெளி மையமான இஸ்ரோவின் முன்னாள் தலைவரும், பத்ம விபூஷன் விருது பெற்றவருமான கலாநிதி கஸ்தூரிரங்கனுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், இலங்கையில் இருந்து பெங்களூருவுக்கு விமானம் மூலம் அழைத்து செல்லப்பட உள்ளார்.
தேசிய கல்விக்கொள்கை 2020-ஐ உருவாக்குவதற்குப் பொறுப்பான பிரபல விஞ்ஞானி, நேற்று திங்கட்கிழமை இலங்கையில் இருந்தபோது மாரடைப்பால் பாதிக்கப்பட்டார்.
தற்போது, அவரை விமானம் மூலம் பெங்களூருக்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.
83 வயதான விஞ்ஞானியின் உடல்நிலை சீராக இருப்பதாக இந்திய ஊடகம் ஒன்று கூறுகிறது.
கஸ்தூரிரங்கன் அறிவியல் மற்றும் கல்வி ஆகிய இரு துறைகளிலும் ஆற்றிய பங்களிப்பிற்காக அவருக்கு இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது உயரிய சிவிலியன் விருதுளான- பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ட்ரம்பால் அறிவிக்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போர்நிறுத்தம்: பிரதமரிடம் விளக்கம் கேட்கும் எதிர்க்கட்சிகள் News Lankasri

காஷ்மீர் விவகாரத்தில் யாரும் மத்தியஸ்தம் செய்ய தேவை இல்லை - டிரம்ப் கோரிக்கையை நிராகரித்த மோடி News Lankasri
