கஸ்ஸப்ப ஆரம்பித்துள்ள அடுத்த நாடகம்.. தொடர் அராஜகத்தில் ஈடுபடும் கும்பல்
ஞானசார தேரர் சிறைக்கு அனுப்பப்பட்டதில் இருந்து அண்மையக் காலமாக தேர்ரகள், பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறிருக்கையில், அனுராதபுர ருவான்வெலிசாய குறித்த அரசின் அபிவிருத்தி திட்டத்திற்கு எதிராக பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த போராட்டத்தில் ஆதரவாளர்கள் என்ற பெயரில் கலந்து கொண்டிருந்த ஒரு கும்பல் தொடர் குழப்பங்களையும் வன்முறைகளையும் மேற்கொண்டு வந்தன.
இதற்கிடையில், விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த கஸ்ஸப்ப தேரர், அதனை புறக்கணித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது, ஞானசார தேரரை விடுதலை செய்ய வேண்டும் எனவும் அரசின் ருவான்வெலிசாய அபிவிருத்தி திட்டத்தை நிறுத்தவும் அவர்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.
இவ்விடயம் குறித்து விரிவாக ஆராய்கின்றது நியூஸ் இன்சைக்ட் நிகழ்ச்சி,