மட்டக்களப்பு- கொக்கட்டிச்சோலையில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை
கொக்கட்டிச்சோலை- கண்டியனாறு குளம் பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையத்தை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்றையதினம்(22.9.2026) இடம்பெற்றுள்ளது.
அத்தோடு, மதுபான உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் தப்பி ஓடியதுடன் 10 பெரல் கோடாவை மீட்டு அழித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தப்பியோட்டம்
பொலிஸ் மாவட்ட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை சுற்றுவளைத்ததையடுத்து மதுபான உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

இதையடுத்து வெற்று பெரல்களை மீட்டெடுத்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுவந்து சேர்த்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.