வவுனியாவில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை:ஒருவர் கைது (Photos)
வவுனியாவில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டதுடன், சந்தேக நபர் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நேற்று முற்றுகை சம்பவம் முன்தினம் (17.01.2023) மாலை இடம்பெற்றுள்ளது.
வவுனியா கற்பகபுரம் பகுதியில் சட்டவிரோத மதுபானம் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின்பேரில் வவுனியா மது ஒழிப்பு பொலிஸார் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.
பொலிஸார் சோதனை
அப்பகுதியை சுற்றிவளைத்த பொலிஸார் இதன்போது கசிப்பு காய்ச்சுவதற்கு தயாரான நிலையில் வைக்கப்பட்டிருந்த ஒரு பெரல் 'கோடா', கசிப்பு உற்பத்தி மேற்கொள்ள பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பவற்றை கைப்பற்றியுள்ளனர்.
இதேவேளை உற்பத்தியில் ஈடுபட்டிருந்த கற்பகபுரம் பகுதியை சேர்ந்த 36 வயதுடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரையும், மீட்கப்பட்ட உபகரணங்களும் வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யா, சீனாவுடன் ஆயுதப்போட்டி ஏற்படும் அச்சம்: அதிர்ச்சியூட்டும் உத்தரவை பிறப்பித்த செயலாளர் News Lankasri

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
