மீண்டும் திறக்கப்படும் காசியப்பனின் குளிர் அரண்மனை
சிகிரியாவில் காசியப்ப மன்னன் வாழ்ந்த “குளிர் மாளிகை” மார்ச் மாதம் முதல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காக திறக்கப்படும் என மத்திய கலாச்சார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் காமினி ரணசிங்க தெரிவித்துள்ளார்.
வரட்சியான காலங்களில் இந்த குளிர் அரண்மனையை காசியப்ப மன்னன் பயன்படுத்தியதாக வரலாறு கூறப்படுகின்றது.
அரண்மனையை சுற்றியுள்ள வடிகால் காரணமாக அதை அணுக முடியாதுள்ளதுடன், கால்வாயின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் குளிர் மாளிகையை பார்வையிடுவதற்கு வாய்ப்பளிக்கப்படும் என பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மத்திய பகுதியில் கண்டி நகருக்கு 72 கிலோமீற்றர் வடகிழக்கே மாத்தளை மாவட்டத்தில் சிகிரிய குன்று அமைந்துள்ளது.
கி.பி 5 ம் நூற்றாண்டில் காசியப்பன் எனும் மன்னன் (கி.பி 473-491) இக்குன்றின் மீது மிகப்பெரிய அரண்மனையை கட்டி இதனை தன் தலைநகராகக் கொண்டான்.கி.மு காலத்தில் இருந்தே இக்குன்று முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றது.
செங்குத்தான இக்குன்றின் மீது ஏற படிக்கட்டுக்களை அமைத்து அதற்கு சிங்க உருவ அமைப்பில் ஒரு நூழைவாயிலும் அமைக்கப்பட்டுள்ளது.இதனால் சிங்க மலை என்பது சிகிரியா எனப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.






ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 10 மணி நேரம் முன்

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

சீனா, அமெரிக்காவிற்கு புதிய சிக்கல்., இந்தியாவின் நட்பு நாடுடன் பிரான்ஸ் Rafale ஒப்பந்தம் News Lankasri
