இந்தியாவில் சிதறிக் கிடக்கும் உடல்கள்.. அதிகரிக்கும் பலி எண்ணிக்கை - பாதுகாப்பு கேள்விக்குறியா..!
காஷ்மீரில் உள்ள ஒரு பொலிஸ் நிலையத்திற்குள் பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்கள் குவியல் வெடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளதுடன் 32 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஸ்ரீநகரில், தடயவியல் நிபுணர்கள் மற்றும் பொலிஸார் அடங்கிய குழு வெடிபொருட்களை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டது.
காயமடைந்த 32 பேரில், சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் ஒரு விபத்து எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனங்காணும் பணி
மேலும், விபத்தில் உயிரிழந்தவர்கள், பெரும்பாலும் தடயவியல் அதிகாரிகள் மற்றும் பொலிஸாராக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இருப்பினும் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

சில உடல்கள் முற்றிலுமாக எரிந்துள்ளதாகவும், குண்டுவெடிப்பின் தீவிரம் காரணமாக நிலையத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள பகுதிகளில் இருந்து சில உடல் பாகங்கள் மீட்கப்பட்டதாகவும் பொலிஸ் வட்டாரத்தை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
திங்களன்று டெல்லியில் நடந்த பயங்கர கார் குண்டுவெடிப்பில் நகரின் வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டை அருகே குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு சில நாட்களுக்குப் பிறகு இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
பாதுகாப்பு
இந்திய அதிகாரிகள் டெல்லி சம்பவத்தை தேச விரோத சக்திகளால் நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாத சம்பவம் என்று சுட்டிக்காட்டியிருந்தனர்.

இந்நிலையில், இந்தியாவில் பொது மக்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றது. மேலும், இது தொடர்பில் மோடியின் நிலைப்பாடு என்னவென்று தெரியவில்லை என கூறப்படுகின்றது.
அதேவேளை, பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய அதிகாரிகளுக்கே பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி பயங்கரவாத அச்சுறுத்தல்களால் ஸ்தம்பித்துள்ளதாகவும் விமர்சிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |