வரவு செலவுத் திட்ட உரையின் நடுவில் ரணிலை நோக்கி தமிழ் சினிமா பாடலை பாடிய உறுப்பினர் (Video)
'உம்மை விட்டால் யாருமில்லை எம் நாட்டை இன்று மீட்பதெற்கென்று' என்ற சினிமா பாடலொன்றின் குறிப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் கோ. கருணாகரன் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (21.11.2023) வரவு செலவுத்திட்டம் தொடர்பாக ஆற்றிய உரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவரது உரையில், எமது கௌரவ நிதியமைச்சரால் முன்மொழியப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் உத்தேச வருமான இலக்கு 4 ஆயிரத்து 127 பில்லியன் மற்றும் உத்தேச செலவீனமாக 6 ஆயிரத்து 978 பில்லியன் ரூபா உள்ளது.
அடைய முடியாத இலக்குகள்
எனவே, 2 ஆயிரத்து 851 பில்லியன் ரூபா வரவு செலவுத்திட்டத்தின் பற்றாக்குறையாக காணப்படுகின்றது.
இன்றைய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் அடைய முடியாத இலக்குகளை வரவு செலவுத்திட்டத்தில் எடுத்துரைத்து நாட்டு மக்களை கற்பனை உலகில் சஞ்சரிக்க வைத்திருக்கிறார் எமது நிதி அமைச்சர்.
இப்போது எனக்கு 'உன்னை விட்டால் யாருமில்லை என் கண்மணியே என் கை அணைக்க' என்ற ஒரு பிரபலாமான சினிமா பாடல் நியாபகம் வருகிறது.
எம் நாட்டை நினைத்து இன்றைய நிலையில் 'உம்மை விட்டால் யாருமில்லை எம் நாட்டை இன்று மீட்பதெற்கென்று என நான் பாடுகின்றேன். மீட்பீர்களா? மீட்பீர்கள் என்ற நம்பிக்கையில் எனது உரையை நிறைவு செய்கின்றேன் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan
