பிள்ளையான் கைதின் பின்னணியில் கருணா! அம்பலமாகும் இரகசியம்
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் (Pillayan) நேற்றையதினம்(8) கைது செய்யப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண பல்கலைக்கழகத்தின் உபவேந்தரான பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கியமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைவாகவே சிவனேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, 2024.12.19ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கருணா அழைக்கப்பட்ட போது பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கியமை தொடர்பான மேலதிக தகவல்களை பெறுவதற்காகவே, தாம் அழைக்கப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன், அந்த விடயம் தொடர்பாக தெரிந்த விடயங்களை நான் குறிப்பிட்டேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், கருணா வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே பிள்ளையான் கைது செய்யப்பட்டிருக்கலாம் என கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விடயம் தொடர்பில் அலசி ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |