19ஆவது திருத்தச் சட்டத்தை உடன் நடைமுறைப்படுத்த வேண்டும்: கரு ஜயசூரிய
அரசாங்கம் உறுதிமொழி வழங்கியதற்கு இணங்க 19 ஆவது திருத்தச் சட்டத்தை உடன் நடைமுறைப்படுத்த வேண்டுமென முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய கோரியுள்ளார்.
சிலாபத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மக்களின் பங்களிப்பு இல்லாத திருத்த சட்டம்
மேலும் தெரிவிக்கையில்,“அடுத்த நாடாளுமன்ற அமர்வுகளின் போது உச்ச நீதிமன்றின் பரிந்துரைகளின் அடிப்படையில் 19ஆவது திருத்தச் சட்டத்தை உடன் நடைமுறைப்படுத்த வேண்டும்.
எந்தவிதமான மக்களின் பங்களிப்பும் இல்லாமல் 20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றியதனால் நாடு இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
புதிய தகவல்களின் பிரகாரம் ஒரு மணித்தியாலத்திற்கு 32 பேர் வெளிநாடு செல்கின்றனர். கடந்த 8 மாதங்களில் 500 மருத்துவர்கள் வெளிநாடு சென்றுள்ளனர்.”என தெரிவித்துள்ளார்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 12 நிமிடங்கள் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
