வோல்தம்ஸ்ரோ கற்பகபதி கற்பக விநாயகர் ஆலய நிமஜ்ஜனப் பெருவிழாவிற்கு அழைப்பு
கற்பகபதி கற்பக விநாயகர் ஆலய நிமஜ்ஜனப் பெருவிழா கற்பகபதி கற்பக விநாயகர் ஆலயத்தில் பதினைந்தாவது ஆண்டாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வழிபாடு செய்யப்படும் கலாரூப விநாயகப் பெருமான் பஞ்ச பூதத்தின் முதல் வடிவமான மண்ணினாலும் அடுத்த வடிவமான நீரினாலும் செய்யப்பட்ட அத்திருவுருவம் பிரார்த்தனை நிறைவேற ஆற்றினில் அல்லது நீரினில் விட வேண்டும் என்ற மரபு உள்ளது.
அதற்கேற்ப எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 31-08-2025 காலை 7.00 மணிக்கு கற்பகபதி ஆலயத்தில் பூஜைகள் ஆரம்பமாகவுள்ளன.
நிமஜ்ஜனப் பெருவிழா
9.00மணியளவில் யாத்திரை புறப்பட்டு 11.00 மணிமுதல் 1.00மணிவரை விழா நடைபெறும்.

இந்த விழாவில் வருடந்தோறும் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் கலந்து கொள்வார்கள்.
அத்துடன் பல ஆலயங்களில் இருந்தும் விநாயகப் பெருமான் நிமஜ்ஜன நிகழ்வில் வந்தடைகின்ற காட்சியையும் காணலாம்.
அனைத்து அடியார்களையும் நிமஜ்ஜனப் பெருவிழாவில் பங்கு கொண்டு தொடர்ந்து வழங்கப்படும் மகா பிரசாதம் பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் வேண்டப்படுகின்றது.




இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam