கராத்தேப் போட்டியில் 10 தங்கப்பதங்கள் உட்பட்ட 29 பதக்கங்களை வென்ற பாடசாலை
கராத்தேப் போட்டியில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய மாணவர்கள் 10 தங்கப்பதக்கங்களையும் 11 வெள்ளிப் பதக்கங்களையும் 8 வெண்கலப் பதக்கங்களையும் பெற்று சாதனைபடைத்துள்ளனர்.
குறித்த போட்டியானது ராம் கராத்தே சம்மேளனத்தினால் தேசிய ரீதியாக அக்கரைப்பற்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(25.08.2024) இடம்பெற்றுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத் தலைவராக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் ஜெய் ஷா தெரிவு
கராத்தேப் போட்டி
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் உள்ள அதிகஸ்ட பிரதேச பாடசாலையாகவும், இதுவரை எவ்வித பொதுப்போக்குவரத்து வசதியில்லாத பாடசாலையாகவும் இப்பாடசாலை காணப்படுகின்ற அதேவேளை, கராத்தே விளையாட்டிற்கான அடிப்படையான விளையாட்டுப் பொருட்கள் எதுவும் இல்லாத நிலையிலும் குறித்த மாணவர்கள் இந்த சாதனையை நிலை நாட்டியுள்ளமை எடுத்துக்காட்டத்தக்கது.
கராத்தே பயிற்றுவிப்பாளரின் தொடர் அர்ப்பணிப்பிலான பயிற்சியினாலும் உடற்கல்வி ஆசிரியரின் பயிற்சி மற்றும் சேவைகடந்த முயற்சியினாலும் பாடசாலை வரலாற்றில் முதன் முறையாக கராத்தே பயிற்சி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு இச்சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது.

விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிக்குறைப்பாடுகளுடன் இந்த பாடசாலை உள்ளமை குறிப்பிடத்தக்கது.
பதக்கங்களைப் பெற்ற மாணவர்களையும், பயிற்றுவிப்பாளர்களையும், அதிபர் ஆசிரியர்களையும் விளையாட்டு ஆர்வலர்களும், கல்விச் சமூகம் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri