மட்டக்களப்பு- திருப்பழுகாமத்தில் சிறுவர்களின் கரகாட்டம் அரங்கேற்றம்
மட்டக்களப்பு- திருப்பழுகாமத்தில் சிறார்களை கொண்டு புதிதாக பழகிய “வள்ளி திணைப்புனம்" எனும் கரகாட்டம் அரங்கேற்றம் செய்யப்பட்டது.
இந்தநிகழ்வானது நேற்று(4) திருப்பழுகாமம் இத்தியடி நாகதம்பிரான் ஆலயத்திற்கு முன்பாக நடைபெற்றுள்ளது.
திருப்பழுகாமம் "கரகாட்ட திலகம் வடிவேல்" மகன் கலைஞர் புவிராஜ் படைப்பில் வள்ளி தினைப்புனம்"எனும் இந்த கரகாட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
கரகாட்டம்
திருப்பழுகாமம் மண்ணில் மருவிப்போன கரகாட்டம் புத்துயிர் கொடுக்கும் முகமாக இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.
ஆரம்ப நிகழ்வாக இறைபதம் அடைந்த "கரகாட்ட திலகம் வடிவேலுவின் உருவப்படத்திற்கு பூமாலை அனிவிக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச சபையின் பழுகாமம் வட்டார உறுப்பினர் சு.விக்கினேஸ்வரன்,கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய பிரதம குரு சச்சிதானந்த குருக்கள் ,பாடசாலை ஆசிரியர்கள்,ஆலய நிருவாகத்தினர்,பொதுமக்கள், கலந்துகொண்டனர். கரகாட்ட நிகழ்வினை பார்வையிட அதிகளவிலான பொதுமக்கள் வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






நல்லூர் கந்தசுவாமி கோவில் 10ஆம் நாள் திருவிழா




