எல்ல – வெல்லவாய வீதி பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் பேருந்து ஒன்று 25 அடி பள்ளத்தில் விழுந்ததில் பேருந்து சாரதி உயிரிழந்துள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்து வெல்லவாய மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து நேற்று (18.07.2023) கரந்தகொல்ல கெகிட்டகந்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வெல்லவாய பகுதியைச் சேர்ந்த பியசேன பஸ்நாயக்க என்ற 73 வயதுடைய நபரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
உமா ஓயா அபிவிருத்தித் திட்டத்தில் பணிபுரியும் நபர்களை இரவுப் பணியை முடித்துக் கொண்டு அவர்களின் தங்குமிடத்திற்கு அழைத்துச் செல்லும் போதே பேருந்து இந்த விபத்தில் சிக்கியுள்ளது.
உயிரிழந்த சாரதி பல வருடங்களாக இவ்வீதியில் பேருந்துகளை ஓட்டி வருவதாகவும், சரிவு பகுதியில் பேருந்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 16 மணி நேரம் முன்

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam
