கட்டண மாற்றங்கள் தொடர்பில் காரைநகர் பிரதேச சபையின் புதிய தீர்மானங்கள்(Photos)
காரைநகர் பிரதேச சபையினால் பல கட்டணங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
காரைநகர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று(14) தவிசாளர் பாலச்சந்திரன் தலைமையில், கசூரினா கடற்கரையில் அமைந்துள்ள பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
இந்த கூட்டத்தில் பல கட்டணங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
தண்ணீர் கட்டணத்தில் மாற்றம்

அந்தவகையில் தண்ணீர் கட்டணத்தில், ஒரு லீட்டர் தண்ணீரின் விலை 1 ரூபா 30 சதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. குறித்த அளவு தண்ணீரை விட மேலதிக தண்ணீருக்கான விண்ணப்பம் கோரும்போது ஒரு லீட்டர் தண்ணீருக்கு 1 ரூபா 50 சதம் அறவிடப்படும்.
தினசரி ஒரு இலட்சத்து இருபதாயிரம் லீட்டர் தண்ணீருக்கு மேல் விநியோகம் செய்கின்ற நிலையில் தண்ணீரினை வீண் விரயம் செய்யாமல் இருக்கும் நோக்குடன் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கசூரினா கடற்கரைக்கான கட்டணங்கள்

இதேவேளை, கசூரினா கடற்கரைக்கான கட்டணங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதற்கமைய திருமணம், பூப்புனித நீராட்டு விழா, பிறந்தநாள் நிகழ்வு அல்லது வேறு நிகழ்வுகளுக்கு படப்பிடிப்பு செய்பவர்கள் 1000 ரூபா கட்டணம் செலுத்த வேண்டும். அத்துடன் படப்பிடிப்பிற்கு வருபவர்கள் ஒவ்வொருவருக்கும் 20 ரூபா கட்டணம் அறவிடப்படும்.
சுற்றுலா பயணிகளாக வரும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கான (உள்நாடு அல்லாமல்) கட்டணம் 300 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதிய நடைமுறைகள்

மேலும், தண்ணீர் பவுசர்களுக்கு ஜி.பி.எஸ் பொருத்தப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் பவுசர்களை கண்காணிப்பதற்கும், மோசடிகளை தவிர்ப்பதற்கும், நேர சூசிகளை சரியாக பேணும் நோக்கிலும் இவ்வாறு ஜி.பி.எஸ் பொருத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தண்ணீர் பவுசர்களுக்கு டிஜிட்டல் மீட்டர் பொருத்தப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மக்கள், தங்களுக்கு வழங்கப்படும் தண்ணீரின் அளவினை துல்லியமாக அறிந்துக்கொள் இவ்வாறு டிஜிட்டல் மீட்டர் பொருத்தப்படவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புகழ் விசாலாட்சியா இது?... Frock போட்டு அவர் வெளியிட்ட போட்டோ Cineulagam