காரைநகர் பிரதேச சபை தவிசாளராக சுயேட்சைக்குழு உறுப்பினர் தெரிவு(VIDEO)
காரைநகர் பிரதேச சபையின் தவிசாளராக அப்புத்துரை தெரிவாகியுள்ளார்.
காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் இதய நோய் தாக்கத்தினால் உயிரிழந்துள்ள நிலையில் காரைநகர் பிரதேச சபை தவிசாளர் பதவி வெற்றிடமாக காணப்பட்டது.
இந்த நிலையில் காரைநகர் பிரதேச சபை தவிசாளர் தெரிவுக்கான விசேட அமர்வு உள்ளூராட்சி ஆணையாளர் பற்றி நிரஞ்சன் தலைமையில் இன்றைய தினம் இடம்பெற்றிருந்தது.
இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் காரைநகர் பிரதேச சபை உப தவிசாளர் பாலச்சந்திரன் போட்டியிட இருந்த போதிலும் அவருக்கு ஏனைய கட்சிகள் ஆதரவு அளிக்காத நிலையில், சுயேட்சை குழுவை சேர்ந்த அப்புத்துரை தவிசாளர் பதவிக்கு போட்டியிட்டு ஈபிடிபி கட்சியின் ஆதரவுடன் வெற்றியீட்டியுள்ளார்.
இன்றைய தவிசாளர் தெரிவு விசேட அமர்வில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளதோடு, தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் நடுநிலை வகித்துள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21 Evening
லட்சுமி பிரியா முதல் பிளாக் பாண்டி வரை.. பிக் பாஸ் 10ல் நுழைந்த போட்டியாளர்கள் முழு லிஸ்ட் Cineulagam