கபில சந்திரசேனவின் பிணைக்கு கைச்சாத்திட்ட இருவர் கைது! நீதிமன்றம் அதிரடி உத்தரவு
ஸ்ரீலங்கன் விமான சேவையின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் கபில சந்திரசேனவுக்கு பிணையாக முன்னிற்க வந்த இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்த சம்பவத்தில் லஞ்சம் பெற்றுக் கொண்ட சம்பவத்தில் ஸ்ரீலங்கன் விமான சேவையின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் கபில சந்திரசேன பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நிலையில், நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.
பிணைக்கு கைச்சாத்திட்ட இருவர் கைது
இந்நிலையில், அவருக்கு பிணையாக முன்னிற்க வந்த இரண்டு நபர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கொழும்பு - சாஞ்சி ஆரச்சி தோட்டத்தில் வசிக்கும் குறித்த நபர்கள் இருவரும் கபில சந்திரசேனவுக்கு அறிமுகமற்றவர்கள் என்றும், காசு வாங்கிக் கொண்டு பிணைக்கு கைச்சாத்திட வந்திருப்பதாகவும் பொலிஸார் நீதமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து, குறித்த சந்தேக நபர்கள் இரண்டு பேரையும் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam