கபில சந்திரசேன பிணை மோசடி - முக்கிய சந்தேக நபர் கைது
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவுக்குப் பணம் பெற்றுத் தருவதற்காக, பிணையாளர்கள் போல் நடித்த நபர்களை ஒருங்கிணைத்ததாகக் கூறப்படும் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் 76 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கபில
முன்னதாக 2013 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்திற்கு எயார் பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்யும் கொடுக்கல் வாங்கல்களின் போது 2 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் பெற்றதாக ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்றதிகாரி கபில சந்திரசேன மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கபில சந்திரசேன கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் கடந்த 5 ஆம் திகதி 5 இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் 100 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் விடுக்கப்பட்டிருந்தார்.
கபில சந்திரசேன பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்து விடுவிக்கப்பட்டதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 100 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளை வழங்குவதற்காக தலா 15,000 ரூபா பணம் செலுத்தப்பட்டு 2 நபர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
நீதிமன்றத்திடம் கோரிக்கை
பிணை நிபந்தனைகளை மீறி நீதிமன்றத்தின் நம்பிக்கையை அவமதித்துள்ள சந்தேகநபரின் பிணையை இரத்துச் செய்து ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு நிறைவடையும் வரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தது.

கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ் போதரகம சந்தேகநபரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிட்டதுடன் அதனை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறும் ஆணையிட்டிருந்தார்.
இந்நிலையில் கபில சந்திரசேன உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan