கந்தளாயில் வங்கி ஊழியர்கள் உட்பட 9 பேருக்கு கோவிட் தொற்று உறுதி
கந்தளாயில் வங்கி ஊழியர்கள் உட்பட ஒன்பது பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
கந்தளாய் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் இன்று மேற்கொள்ளப்பட்ட அண்டிஜன் பரிசோதனையின் மூலமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இதற்கு பொறுப்பான வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதைவேளை அனைத்து வங்கி ஊழியர்களுக்கும் அண்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தவர்களை சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்த உள்ளதாகவும், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் கந்தளாய்-பேராசை பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர்ச்சியாகத் திருகோணமலை மாவட்டத்தில் அண்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் திருகோணமலை சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.
மேலும் முகக்கவசங்கள் அணியாதவர்களை பொலிஸாரின் ஒத்துழைப்புடன் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணியகத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாகப் பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பேணுமாறும், முகக் கவசங்களை
அணியுமாறும் சுகாதார திணைக்களம் பிடிக்கும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும்
கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.தௌபீக் பொதுமக்களிடம்
கோரிக்கை விடுத்துள்ளார்.
27வது திருமண நாள் நெருங்கும் நிலையில் விவாகரத்து வழக்கு வாபஸ்! விஜய்யுடன் மீண்டும் இணைவாரா? Manithan
ஸ்காட்லாந்தில் கொடூர பாலியல் குற்றவாளி தப்பியோட்டம்: தேடுதல் வேட்டையில் காவல்துறையினர் News Lankasri
இதெல்லாம் வெறும் ட்ராமா! மோகன் சர்மா முதியோர் இல்ல நாடகம் குறித்து குட்டி பத்மினி பரபரப்பு பேட்டி Manithan